கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Date:

கொட்டாஞ்சேனையின் பெனடிக்ட் மாவத்தையில் நேற்று (10) இரவு 7.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், படுகாயமடைந்த 43 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் தகவலின் படி, இந்த துப்பாக்கிச் சூட்டில் டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை 04 பொலிஸ் குழுக்கள் ஆரம்பித்துள்ளன.

துப்பாக்கிச் சூடு குறித்து மேலும் தகவல்களைப் பெறுவதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

28 வயது காதலனுக்காக குழந்தையை வீதியில் விட்டுச்சென்ற 38 வயது தாய்

வத்தேகம பொலிஸ் பிரிவின் யதிரவன பகுதியில் உள்ள ஒரு குறுக்குச் சாலையில்,...

ஷிரான் பாசிக் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கைது செய்யப்பட்ட, இலங்கையின் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்