நவ சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், டுபாயிலிருந்து நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11) காலை 6.00 மணியளவில் அவரை பொலிஸார் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க அறிவித்தார்.
முன்னதாக, டேன் பிரியசாத், டுபாயில் வாகன விபத்தில் இறந்து போனதாக பொய் பிரசாரம் செய்து பதுங்கியிருந்துள்ளார். அதனை தொடர்ந்து, அவர் நாடு திரும்பியபோது, கல்கமுவ பொலிஸாரின் பிடியாணையின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த டேன் பிரியசாத், அரகல போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களின் முதன்மையானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர் தற்போது நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




