காற்று மாசுபாடு அதிகரிப்பு: பொலன்னறுவை, திருகோணமலைப் பகுதியில் உச்ச நிலை

Date:

திருகோணமலை மற்றும் பொலன்னறுவையில் காற்றின் தரம் குறைவடைந்துள்ள நிலையில், காற்று மாசு வீதம் உயர்வாக உள்ளதென அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆராய்ச்சி நிறுவனமான என்எப்ரோ (NBRO) தனது சமீபத்திய அறிக்கையில், இலங்கையின் 9 பகுதிகளில் காற்று தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் படி, கொழும்பு, கண்டி, இரத்னபுரி, எம்பிலிபிட்டிய, புத்தளம், பதுளை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்புகள், காற்று மாசுபாடு மற்றும் வறண்ட காலநிலை காரணமாக காற்று தரம் குறைந்துள்ள பகுதிகளில் உயர் மதிப்பில் மாசுபாடு அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன.

குறிப்பாக, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில், காற்றின் மாசுபாடு உச்ச வீதத்தில் பலவீனமாக உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், மக்கள் சுகாதாரத்துக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்று தரம் குறைவான பகுதிகளில் மக்கள் பாதுகாப்புக்கான ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்