பிரபல பாடசாலை துணை அதிபரை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பியகம பகுதியில் பதிவாகியுள்ளது.
பியகம பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் துணை அதிபரை கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 32 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்கள் இருவரும் சியம்பலாப்பே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் பின்னணியில் உள்ள விவகாரங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், தாக்கப்பட்ட துணை அதிபரும், சந்தேகத்திற்குரிய ஆசிரியர்களும் ஒரே பாடசாலையில் பணிபுரிந்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட இந்த கடுமையான சம்பவம், கல்வி சமூகத்திற்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.