நாடு முழுவதும் திடீர் மின் தடை

Date:

இலங்கை முழுவதும் இன்று (09) ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர், “நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி வந்துள்ளதாகவும், இதற்கான காரணம் இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த திடீர் மின்வெட்டை சரிசெய்ய பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 4 முதல் 6 மணி நேரம் இத்தகைய சரிசெய்தல் முடியும் என மின்சார சபை வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த திடீர் மின் தடை காரணமாக பொதுமக்கள் மற்றும் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சார சபையின் நடவடிக்கைகள் குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்