அங்கொடை சந்தியில் தீ பரவி பெரும் சேதம்

Date:

அங்கொடை சந்தியில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கடையில் ஏற்பட்ட தீயானது அருகிலிருந்த மேலும் இரண்டு கடைகளுக்கும் பரவியதில் இரு கட்டிடங்கள் முழுவதும் எரிந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன், அப்பகுதி மக்கள் தீயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், தீ வேகமாகப் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது, கோட்டே மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த விபத்தில் ஒரு வீடும் ஒரு கடையும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ பரவல் சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் விசாரணைகள் தொடருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்...

பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்