முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

Date:

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த புதன்கிழமை (5) மாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாக பெற்றோலியப்பொருட்கள் ஏற்றிச்சென்ற பவுஸர் ஒன்று, தேவாரபுரம் பகுதியில் இருந்து பிரதான வீதியை கடக்க முயன்ற இரு பேருடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சித்தாண்டி முருகன் கோயில் பின் வீதியைச் சேர்ந்த வீரக்குட்டி ரமேஷ் (வயது 39), என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். அவரது உடல் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட பவுஸர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்