இலங்கையின் 77வது சுதந்திர தினமான இன்று (04), நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாக, கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த எதிர்ப்புப் பேரணி, ஈழத்தமிழர் மீதான பல தசாப்தங்களாக நீடித்த ஆக்கிரமிப்புகள், இனஅழிப்பு முயற்சிகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசின் கட்டாய ஒடுக்குமுறைகளை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இதில் ஈழத்தமிழர் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு, இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு ஒரு கரிநாள் என்பதைக் கருத்தரங்கமாக முன்வைத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1