திருகோணமலை முகாமடியில் மீன்பிடிக்கச் சென்ற முருகையா தட்சிணாமூர்த்தி (52) என்பவர் கடலலைக்குள் சிக்குண்டு இறந்துள்ளார்.
இன்று (03), குறித்த கடலில் படகை தள்ளிச் செல்லும் போது கடலலைக் கடுமையாக இருந்ததால், அவர் அதில் சிக்குண்டு மாயமானார் என தெரிவிக்கப்படுகிறது. கடல் அலையில் சிக்கி ஒரு மணி நேரம் கடந்தும் அவரை காண முடியாத நிலையில், அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பகுதி மீனவர்களும், கடற் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைந்து தேடுதல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்தனர்.
எனினும், மாலை 6.15 மணியளவில் அவரது சடலம் கிடைக்கப்பெற்றுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1