மெதகம பகுதியில், 1 வயது நிரம்பிய குழந்தை வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (01) மாலை பதிவாகியுள்ளது.
மல்கஸ்தலாவ, மாகல்லகம பிரதேசத்தில் வசித்து வந்த இந்த குழந்தை, தாயுடன் வீட்டில் இருந்த போது, தாய் உறங்கிய நிலையில், வீட்டின் முன் இருந்த கிணற்றில் தவறி விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1