முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா பயணித்த வாகனம் இன்று (01) திருகோணமலை உப்புவெளி பகுதியில் விபத்துக்குள்ளானது.
மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மட்டக்களப்பிலிருந்து பயணித்த போது, வாகனத்தை நிறுத்திய நிலையில், பின்னால் அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் பின்னால் இருந்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1