திருகோணமலை சர்வோதயம் பகுதியில் இன்று (01.02.2025) காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. வேன் வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தரிப்பதற்காக வேகத்தை குறைத்த வேன் மீது, பின்னால் வந்த இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சமநிலையை இழந்து வேகமாக மோதி, வேனின் பின்புற கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1