திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது மூழ்கி காணாமல் போன 20 வயதான இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (30) மாலை திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது கடல் அலையின் தாக்கத்தால் நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கினர். இவ்வாறு மூழ்கிய நால்ரில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (01.02.2025) காலை குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1