நேற்று (31) காலை கப்பல் பழுது பார்க்கும் தடாகம் ஒன்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு துறைமுக வளாகத்தில் துணை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஒருவர் கப்பலை பழுதுபார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், 37 வயதுடைய பரகஹவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுழியோடிகள் மூலம் அவரை மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1