முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைக்கேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆராய இக்குழுவை நியமித்துள்ளார்.
ஆளுநர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து எழுத்துப்பூர்வ புகார்களும் இந்த விசாரணை குழுவிற்கு அனுப்பப்படும் எனவும், இக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1