கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் மார பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதிய தாக்கத்தால் வாகனகள் தலைகீழாக புரண்ட நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, அருகில் இருந்த ஒரு மோட்டார்வாகனமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
மேலும், அருகிலிருந்த பழக்கடை வியாபார நிலையமும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவ் விபத்திற்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1