ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

Date:

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பயணித்த நால்வரும் காயமடைந்து, முதலில் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஒரே வங்கிக்கணக்கிலிருந்து முஸ்லிம், சிங்கள அடிப்படைவாதிகளுக்கு சம்பளம்: ராஜபக்சக்களின் திருகுதாளங்களை அம்பலப்படுத்திய அனுர!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...

யாழ் வந்த பிக்குகள் சொன்னதென்ன?

யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை...

வல்வெட்டித்துறையில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்