28.2 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இந்தியா

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

காதலியை கொலை செய்து சடலத்தின் மீது ரசாயனத்தை ஊற்றி பதப்படுத்திய மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (78). இவரது மகள் சிந்தியா (37). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தந்தை சாமுவேலுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற வசதியாக சென்னையை அடுத்த ஆவடி திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் சிந்தியாவுடன், சாமுவேல் சங்கர் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சாமுவேல் வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினர் நினைத்துள்ளனர். ஆனாலும், அவ்வப்போது அவர்களது வீட்டிலிருந்து லேசான துர்நாற்றம் வீசியுள்ளது. ஏதாவது எலி இறந்து, அதன் மூலம் துர்நாற்றம் வீசி இருக்கலாம் என அண்டை வீட்டார் நினைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று வழக்கத்தைவிட அதிகளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, சாமுவேல் சங்கரின் உறவினர்களும், அவரைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, திருமுல்லைவாயல் போலீஸார் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, 2 உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. அவை, சாமுவேல், சிந்தியாவின் சடலங்கள் என்ற முடிவுக்கு வந்த போலீஸார் அவற்றை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து, போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கினர். முதல்கட்டமாக சிந்தியாவின் செல்போன், சைபர் க்ரைம் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், சிந்தியாவோடு கடைசியாக யார் யாரெல்லாம் பேசினார்கள் என்பதை கண்டறிந்தனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஓமியோபதி மருத்துவர் சாமுவேல் எபினேசர்(34) என்பவர் சிந்தியாவுடன் அடிக்கடி பேசி வந்ததும், வாட்ஸ்அப்பில் தகவல்களை பரிமாறி இருப்பதும் தெரியவந்தது.

அவரை தனியாக விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே சிந்தியாவை அடித்து கொலை செய்த சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்த சிந்தியாவுக்கு மருத்துவரான சாமுவேல் எபினேசருடன் இன்ஸ்டாகிராம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். எபினேசர் மருத்துவர் என்பதால், அவரது ஆலோசனைப்படி, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது தந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார் சந்தியா.

வேலூரில் இருந்து அடிக்கடி சென்னை வந்து சிகிச்சை பெறுவது சிரமம் என்பதால், அவர்களுக்கு திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பார்த்து கொடுத்துள்ளார் எபினேசர். இதையே சாதமாக பயன்படுத்தி, சிந்தியா வீட்டுக்கே அடிக்கடி சென்று அவரது தந்தைக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்துள்ளார். இதனால் சந்தியாவுடன் அவருக்கு நெருக்கம் அதிகமாகி உள்ளது.

தந்தை இறப்பால் தகராறு: இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் முதியவர் சாமுவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், வேதனை அடைந்த சிந்தியா, தந்தையின் இறப்புக்கு எபினேசரின் சிகிச்சை குறைபாடே காரணம் என கூறி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் மோதலாக மாறி உள்ளது. இதில், பிடித்து தள்ளியதில் சிந்தியா எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத எபினேசர் என்ன செய்வது என தெரியாமல், பயத்திலும், நடுக்கத்திலும் கொலையை மறைக்க முடிவு செய்துள்ளார்.

முதல் கட்டமாக இருவரிடன் சடலத்தையும் அறை ஒன்றில் வைத்து பூட்டிவிட்டு ஏ.சி.யை ஆன்செய்து வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், ரசாயனத்தை வாங்கி வந்து அதை இருவரிடன் சடத்தின் மீதும் ஊற்றி பதப்படுத்தி உள்ளார். இதனால், உடல் அழுகினாலும் பெரிய அளவில் துர்நாற்றம் வீசவில்லை. இந்த தகவல் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

காவல் ஆணையர் விளக்கம்: கொலை தொடர்பாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில், சிந்தியாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்தால் மரணம் நிகழ்ந்ததாகவும், சாமுவேல் சங்கர் இறப்பு இயற்கையானது என்றும் தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில், ‘சாமுவேல் சங்கர் நோய் காரணமாகவே இறந்துள்ளார். தந்தையை காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கத்தில் சிந்தியா, எபினேசருடன் வாக்குவாதம் செய்துள்ளார். எபினேசர் வெளிநாடு செல்ல போவதாக கூறியதால் ஏற்பட்ட சண்டையில் பிடித்து தள்ளியதில் சிந்தியா கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்து விட்டார்’ என்று தெரியவருகிறது. இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

east tamil

ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Pagetamil

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

Pagetamil

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் கருத்து

Pagetamil

இந்திய பாதுகாப்புப் படையினரால் 31 மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

east tamil

Leave a Comment