25 C
Jaffna
January 31, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து – டேவிட் பைன்

இலங்கையின் சுற்றுலாத்துறை, கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்தித் துறைகளில் இணைந்து செயல்பட நியூசிலாந்து ஆர்வம் கொண்டுள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷிற்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் தலைமையிலான குழு, தனது வடக்கு விஜயத்தின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசட்குணராஜா தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் சட்டவிரோத புலம்பெயர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ப்ரெட் சீஃல்ட்ட், கொள்கை ஆலோசகர் சுமுது ஜயசிங்ஹ ஆகியோரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன், பொருளியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முத்துகிருஷ்ணா சர்வானந்தன், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை நிகழ்ச்சி திட்டத் தலைவர் பேராசிரியர் சிவானந்தமூர்த்தி சிவேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் சுற்றுலா, விருந்தோம்பல், விவசாயம், கடற்றொழில் மற்றும் விளையாட்டு மருத்துவம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளக்கூடிய கூட்டுத் திட்டங்கள் பற்றிய விவரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நியூசிலாந்து அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான இணைப்பு நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவை பல்கலைக்கழகம் முன்வைத்ததோடு, இதற்கான ஆதரவை வழங்கும் முனைப்பை நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் உறுதிப்படுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடைபெற்றுச்செல்லும் மாவை அண்ணைக்கு அஞ்சலி மரியாதை!

Pagetamil

மாவையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் இரங்கல்

Pagetamil

மாவையின் புகழுடலுக்கு தமிழரசு பதில் தலைவர் சீ.வீ.கே அஞ்சலி

Pagetamil

ஹெரோயினுடன் கைதான இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்

east tamil

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு

east tamil

Leave a Comment