காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர், ஹமாஸின் பணயக் கைதிகள் பட்டியலை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி, மற்ற 25 பணயக் கைதிகள் உயிருடன் இருப்பதாகவும், ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஹமாஸிடமிருந்து பணயக் கைதிகளின் விவரங்களைப் பெற்ற இஸ்ரேல், அவர்களின் நிலைமை குறித்து சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு தகவல் வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில் ஒரு தொகுதி நாளை மறுதினமும், மற்றொன்று எதிர்வரும் சனிக்கிழமையும் விடுவிக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1