மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம். ஜம்சித் நேற்று (27) திங்கட்கிழமை தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதோடு, பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
பொறுப்பேற்பு நிகழ்வில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது பிரதேச சபையின் எதிர்கால பணிகளை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.
பிரதேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் புதிய செயலாளரின் நடவடிக்கைகள் மூலம் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1