வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள கட்டைக்காடு பகுதியில் இயேசு சிலை ஒன்றிலிருந்து நீர் கசிந்துள்ள அதிசய சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று (28) பிற்பகல், ஆண்டவரின் சிலுவை பகுதியில் நீர் கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவரின் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தை அறிந்த பிறகு, பல்வேறு இடங்களிருந்து வந்த மக்கள், ஆண்டவரின் காலில் இருந்து வடிந்த நீரை எடுத்துச் சென்றனர். சகோதர மதத்தினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இந்த அதிசய காட்சியை பார்வையிட்டனர். பலர் அந்த நேரத்தில் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்தவுடன் கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர், அதன் உறுதிப்படுத்தல் செய்யப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.