வாரியபொல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (25.01.2025) மாலை பதிவாகிய குறித்த சம்பவத்தில் 13, 16 வயதுடைய சிறுவர்களே சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீராடச் சென்ற சிறுவர்கள் திடீரென நீரில் மூழ்கியதை பார்த்த பிரதேசவாசிகள் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், ஒருவரான 13 வயதான சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததோடு, மற்றைய 16 வயதான சிறுவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்த சிறுவனின் சடலம் தற்போது வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வாரியபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.