சன்மார்க்கா அமைப்பின் நிறுவுனர் பகீரதன் மற்றும் Forum for Rural Income and Environmental Development Services நிறுவனத்தின் தலைவர், வடமராட்சி கிழக்கிலுள்ள போக்கறுப்பு, முள்ளியான், வெற்றிலைக்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளின் கீழ் உள்ள கேவில், வேதகுளம், நித்தியவெட்டை, கட்டைக்காடு மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களின் சுயதொழில்களை கண்காணித்தனர்.
இந்த விஜயத்தின் போது, சுயதொழில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் மற்றும் மக்களின் தொழில்நிலை குறித்து கண்காணிப்பு நடைபெற்றது. ஆரம்ப கட்டமாக ஒவ்வொரு கிராமத்திலும் 25 முதல் 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், பயிற்சிகளின் தொடர்ச்சியாக, நன்கொடையாக ரூ.20,000 மற்றும் வட்டியில்லா கடனாக ரூ.25,000 வழங்கப்பட்டு, சுயதொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முயற்சிகள் வடமராட்சிப் பகுதி மக்களின் வாழ்க்கைமுறை மேம்பாடு மற்றும் சுயதொழில்முறை திறன் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையவுள்ளது