யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் இன்று (25) மாலை முடிவுக்கு வந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது, மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடையை விலக்கிக் கொள்வது பற்றி ஆராயப்பட்டது.
இதையடுத்து, மாணவர்களுக்கு எச்சரிக்கையுடன், தற்போது அமுலில் உள்ள தண்டனைகளை விலக்கிக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, பேரவை உறுப்பினர்களான சட்டத்தரணிகள் அன்ரன் புனிதநாயகம், ரெங்கன் தேவராஜன் உள்ளிட்டவர்கள் மாணவர்கள் போராடும் இடத்துக்கு சென்று, அவர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1