கிளிநொச்சி திருநகர் பகுதியில் இன்று (25) காலை புதையல் தோண்டியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர், நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1