Pagetamil
இந்தியா

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

தமிழகத்தில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கற்கோவில் அமைக்கும் பணி என பல லட்ச ரூபாய் மோசடி சந்தேக நபர் தலைமறைவாங்கியுள்ளார்.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கற்கோவில் அமைக்கும் பணியின் தலைவர் என தன்னை அடையாளம் காட்டிய இலக்கணப்பிள்ளை பாஸ்கரன் (198031904289) என்பவரால் தமிழகத்தில் 680,000 இந்திய ரூபாயும், கொழும்பில் 35 லட்சம் ரூபாயும் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகத்திலும் கொழும்பிலும் குற்றவியல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொக்கட்டிச்சோலை ஆலய நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ கடித தலைப்பில் ஆலய நிருவாகம் கையொப்பமிடப்பட்ட முறைப்படியான அங்கீகாரமுள்ள அனுமதிக்க கடிதம் அவரிடம் உள்ளது.

அக்கடிதத்தைக் காட்டி தமிழகத்தில் உள்ள ஆலய சிற்பம் செய்யும் தமிழக இந்து ஆறநிலயத்துறையில் பதிவு செய்யப்பட்ட சிற்பம் செய்யும் ஒரு நிறுவனத்திடம் இந்தியா நாணயப்படி சுமார் 200 கோடி ரூபாக்கு அதாவது இலங்கை நாணயப்படி சுமார் 700 கோடி ரூபாய்க்கு இதற்கான ஒப்பந்தம் ஒன்றில் 09/07/2024,அன்று கைச்சாத்திட்டுள்ளார்.

HOTEL SUTHERN COMPORT (No.5, Old Station Road, GST Main Road, Meenambakkam, Chennai 600 027) விடுதியில் ஒரு சிங்கப்பூர் பெண்மணியுடன் நாள் ஒன்றுக்கு இந்திய ரூபாவில் 7000 ஐ செலுத்தி நீண்டநாள் தங்கி உள்ளார்.

இவரால் தங்குமிட வாடகை கட்டமுடியாததால், இலங்கையில் உள்ள இவரது வங்கிக் கணக்கின் கிரடிட் கார்ட்டீல் தவறாக மூன்று முறை இரகசிய இலக்கத்தை அழுத்தியதால் கார்ட் இயக்கம் தடைப்பட்டுள்ளதாகவும் தான் இலங்கை சென்றே அதை சரி செய்யமுடியும் என்று கூறியுள்ளார்.

தனது வங்கியின் Blance Sheet போன்று ஒன்றை தானே தயாரித்து, அதில் பதினொருகோடியே இருபத்தியேழு லட்சத்து ஐம்பாதயிரத்து முநூற்றி நாற்பத்தி ஒரு ரூபாய், ஐம்பது சதம் இருப்பதாகவும் (11,27,50341.50), ஒருகோடி எழுபது லட்சம் (1,700,000.00) வங்கிக் கணக்குக்கு வந்திருப்பதால் நானே சென்று இவற்றைச் சரி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதில் இவரது சாரதியாக கடமையாற்றியவரும் அடங்கும். இவரது சாரதியே கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கற்கோவில் அமைக்கும் பணியின் 200 கோடி ஒப்பந்தம் கை ஒப்பம் இட்டுள்ளனர் என்று கூற எல்லோரும் நம்பி விட்டனர்.

இலக்கணபிள்ளை பாஸ்கரன் என்பவர் காண்பித்த HNB/BOC வங்கி அட்டைகள் இரண்டும் DEBIT card என்றும் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே பெறமுடியும் என்று ஒரு பொலிஸ் அதிகாரியே பணம் கொடுத்தவர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், BOC வங்கிக் கணக்கில் உள்ள கணக்கிலக்கம் வேறு BOC வங்கி அட்டையில் உள்ள BOC வங்கிக் கணக்கிலக்கம் வேறு என்றும் வங்கி அட்டையில் கணக்கு இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதயும் சுட்டிக்காட்டி, இது மிகவும் நூதனமான மோசடி என்று வழக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

Pagetamil

வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Pagetamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

துறவறத்துக்கு மாறிய நடிகை

Pagetamil

கட்சி தொடங்கியதுமே சிலர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்: விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

Pagetamil

Leave a Comment