26.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இலங்கை

TikTok ஊடாக காதலித்த காதலியை தேடி வந்த இளைஞர்: பொலிஸாரால் கைது

TikTok வழியாகத் தொடங்கிய காதல், திருகோணமலை பிரதேச இளைஞர் ஒருவரையும் பசுமலை பிரதேச பாடசாலை மாணவியையும் இணைத்துள்ளது. இந்த காதல் உணர்வில் சிக்கிய இளைஞர், தனது காதலியை நேரில் பார்க்கும் ஆசையில், பசுமலை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்பகுதியில் வேற்றார் போல காணப்பட்ட இளைஞர் தொடர்பாக பொதுமக்களிடையே சந்தேகம் உருவாகியதால், உடனே அவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், குறித்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, ஏன் இங்கு வந்ததற்கான அனைத்து காரணங்களையும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அத்தோடு குறித்த நபரிடம் அடையாள அட்டை ஏனைய எந்த ஒரு தகவல்களும் இல்லாத காரணத்தினால் பொலிஸார் நேற்று (23) அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இளைஞர், இன்று (24) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். TikTok காதல் விவகாரம் இவ்வாறு காவல்துறை விசாரணையால் முடிந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெங்கு அபிவிருத்தி சபையின் புதிய கொள்கை

east tamil

வாகன விபத்துகளால் கடந்த 24 மணித்தியாலத்தில் நால்வர் பலி

east tamil

சலோச்சன கமகே பிணையில் விடுவிப்பு

east tamil

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம்: சீ.வீ.கே. நன்றி!

Pagetamil

கடவுச்சீட்டு தொடர்பில் சஜித் பிரேமதாச பாராளுமன்ற கேள்வி

east tamil

Leave a Comment