வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கான பிரச்சினை 2024 நவம்பர் 4 முதல் தீர்வு காணப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கம் அறிவித்திருந்தாலும், தற்போது கடவுச் சீட்டு பெற மக்கள் 3 முதல் 4 மாதங்கள் காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் இது தொடர்பாக நிலையியற் கட்டளை 27/2 கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடி வரும் ஏராளமானோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்ற அடிப்படையில், இது தொடர்பாக அரசாங்கத்திடமும், துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடமும் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அமைச்சரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
புதிய கடவுச்சீட்டு தயாரிப்பதில் இருந்து மேற்கொண்டு எழுந்துள்ள பல பிரச்சினைகள் குறித்து இங்கு கேள்வி எழுப்பினார்.ஒவ்வொரு பிரிவுகளுக்கும் கீழாகவும் விண்ணப்பதாரர் ஒருவர் கடவுச்சீட்டைச் பெற எடுக்கும் நேரம், தினசரி வழங்கப்படும் மற்றும் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுக்களில் சராசரி எண்ணிக்கை, அத்துடன் இந்த கடவுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தடங்களை ஏற்படுத்தியுள்ள காரணங்கள், இயல்புநிலைக்கு திரும்ப எதிர்பார்க்கப்படும் காலம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
ஜனவரி 2024 முதல் இன்று வரை கடவுச்சீட்டுக்களைப் பெற பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை, வழங்க வேண்டியள்ள எண்ணிக்கை, தற்போது கையிருப்பில் இருக்கும் எண்ணிக்கை, தற்போது கடவுச்சீட்டுகளை வழங்கும் சேவை வழங்குநர் யார்? குறித்து கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பான விலைமனு கோரல் தொடர்பான தகவல்களை சபையில் சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவது முக்கியம் என்ற படியால், இவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதால், எடுத்த நடவடிக்கைகள் குறித்து உடனடியாக பதில் வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
“வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவது முக்கியம், எனவே, இதற்கான வசதிகளை அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.