திருகோணமலை அலஸ்தோட்ட கடற்கரையில் இன்று (24) இறந்த நிலையில் ஒரு பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது.
இந்த திமிங்கலத்தின் உடல் பருமனும் நீளமுமாக உள்ளதால், அது அப்பகுதியில் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பாதுகாப்பாக அகற்றும் மற்றும் புதைக்கும் பணிகள் தற்போது அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திமிங்கலத்தின் மரணத்திற்கான காரணம் தொடர்பாகப் பின்னர் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1