மஸ்கெலியா லக்சபான தோட்டத்தின் உதவி முகாமையாளர் வீட்டின் அருகே, இறந்த நிலையில் கிடந்த புலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடையாளங்கண்ட தொழிலாளர்கள், உடனடியாக தகவல் தெரிவித்ததையடுத்து, தோட்ட முகாமையாளர் இந்த விஷயத்தை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
8 வயது மதிக்கத்தக்கதாஇறந்த புலி சுமார் இருந்தது. வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, புலியின் உடலை பரிசோதனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு புலி இறந்ததற்கான காரணம் என்ன என்பதற்கான விசாரணைகள் நல்லதண்ணி பொலிஸாரின் பங்குபாட்டுடன் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. புலியின் மரணத்திற்கு பின்னால் உள்ள உண்மையான காரணங்களை விளக்க, பரிசோதனை முடிவுகள் பெரும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.