28.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

அர்ச்சுனாவின் வழக்கில் பெயர் மாறுபாட்டால் குழப்பம்

நீதிமன்றத்தில் சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போது, ​​அநுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரை “அர்ச்சுனா லோச்சன்” என்று பெயரிட்டனர்.

ஆனால் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, சரியான சந்தேகநபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் நேற்று (21) அதிகாலை போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன்படி, போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

இதையடுத்து, மோட்டார் போக்குவரத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன்படி சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விடயம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம், அநுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது

east tamil

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

east tamil

கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி

east tamil

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

Leave a Comment