கேரளாவின் பாலா பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு மாணவியை அவரது சக மாணவர்கள் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியூட்டியுள்ளது.
குறித்த மாணவி, கடந்த 10ம் திகதி வழக்கமாக பள்ளிக்குச் சென்றபோது, ஓய்வு நேரத்தில் வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அந் நேரத்தில், 7 மாணவர்கள் அவர் அமர்ந்திருந்த இடத்தில் மாணவியின் ஆடைகளைக் கழற்றி, செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது மாணவியிடம் மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்கியது, எனவே அவர் முதலில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இது பற்றி ஏதும் கூறாமல் இருந்துள்ளார்.
பின்னர், மீண்டும் அந்த மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ எடுப்பதற்கு குறித்த மாணவர்கள் முயற்சித்த போது, அவர் அங்கு இருந்து தப்பித்து ஓட, அதைக்கண்ட ஆசிரியர்கள் குறித்த மாணவியிடம் வினவிய போது. அந்த மாணவி, வகுப்பறையில் நடந்த அந்த கொடூர சம்பவத்தை விவரித்துள்ளார். மேலும் அதற்கு முன்பு எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பியதையும் தெரிவித்துள்ளார்.
இத்துடன், மேலும் வீடியோ எடுக்க முயன்றமையையும், அதிலிருந்து தன்னை காக்கவே தான் ஓடியதாகவும் தெரிவித்தார். குறித்த மாணவியின் புகாரின் பேரில், ஆசிரியர்கள் அந்த மாணவியின் பெற்றோரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் துரிதமாக வழக்கு பதிவு செய்து, இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.