நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் 14ம் திகதி பொங்கல் தினத்தில் ராமர் பஜனை ஊர்வலத்தில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, 45 வயதான மாணிக்கம் யோகேஸ்வரன் கூரிய ஆயுதம் மூலம் தாக்கப்பட்டு, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது, 20ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக, பழைய பகை காரணமாக பொங்கல் தினத்தில் ஏற்பட்ட சிறு வாய்த்தர்க்கம், பின்னர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதென தொடக்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் நுவரெலியாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிஸாரின் விசாரணையின் போது சம்பவம் தொடர்பான 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களை நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.