இன்றைய தினம் (21) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்னசேகர அவர்களின் தலைமையில், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மக்கள் தினம் ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தேறியது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி. எஸ். ரத்நாயக்க மற்றும் திருகோணமலை மாவட்டச் செயலாளர் டபிள்யூ. அமரதுங்க உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மக்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள், அவசர தேவைகள் மற்றும் மேலதிக சேவைப் பாதுகாப்புகளை இலகுவாக்குவதற்கான தீர்வுகள் இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாகக் காணப்பட்டது.
மேலும், மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளைப் பரிசீலித்து, அதற்கான தீர்வுகளை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.