பேருவளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் “எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட வரி நிலையாக தொடரும் எனவும், நம் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் உலகளாவிய சந்தைகளின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தற்போது இந்த வரியை குறைப்பது சாத்தியமில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதனுடன், சம்பூர் பிரதேசத்தில் ஒரு புதிய சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் விரைவில் நிர்மாணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டம் நாட்டின் சக்தி நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் முன்னேற்றம் அளிக்கும் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1