அமெரிக்காவின் வொஷிங்டன் டிசி நகரில் இந்திய மாணவன் ஒருவன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2022ல் தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற, ஹைதராபாத் நகரின் ஆர்கே புரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ரவி தேஜா என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
படிப்பை முடித்த பின்னர் அங்கு வேலை தேடும் நிலையில், கடந்த 20ம் தேதி எரிவாயு நிலையம் அருகில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவி தேஜா உயிரிழந்த அறிசம்பவத்தை அறிந்த அவரது குடும்பத்தினர் பேரதிர்ச்சியில் உள்ளனர். அவரது தந்தை சந்திரமௌலி வேதனையுடன், “எந்தத் தந்தையாலும் இதை தாங்க முடியாது. இதுபோன்ற நிலைமை யாருக்கும் நேராமல் இருக்க வேண்டுகிறேன்,” என்று கண்கலங்கிய நிலையில் கூறியுள்ளார்.
இந்த கொலை சம்பவத்திற்குப் பதிலளித்த சிக்காகோவில் உள்ள இந்தியத் தூதரகம், “இந்திய மாணவர் சாய் தேஜாவின் கொலை ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று உறுதிபடுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வெளிநாடுகளில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களிடையே பயத்தையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.