25.2 C
Jaffna
March 7, 2025
Pagetamil
இலங்கை

வம்புச் சண்டை வளர்த்த அர்ச்சுனா நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்!

போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வந்த சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வாகனத்தில் பிரமுகர்கள் பயணிக்கும் போது பயன்படுத்தும் ஒலி, சப்த சமிக்ஞையை எழுப்பியவாறு அர்ச்சுனா பயணித்தார். அதை பொலிசார் தடுக்க முற்பட்டபோது, அர்ச்சுனா வழக்கமான பாணியில்- ரௌடித்தனமான முறையில்- நடந்து, அதை பேஸ்புக்கில் ஒலிபரப்பினார். அவரது நடத்தை பிழையானது என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

கச்சதீவு திருவிழா ஏற்பாட்டு கலந்துரையாடல்

Pagetamil

தத்தெடுத்த குழந்தை கொலை: தம்பதிக்கு மரணதண்டனை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!