இந்தியாவின் ஈரோடு மாவட்டம் உடையார்பாளையத்தில் 5ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரவணன் – மஞ்சுளா தம்பதியரின் இளைய மகளாகிய அக்ஷயா, வீட்டில் உள்ள சிறிய வேலைகளை செய்யும்படி தாய் கூறியதைத்தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
நேற்று (19) காலை தாய் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது, சமையலறையில் அக்ஷயா துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியுடன் சத்தமெழுப்பினார்.
இச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவ்விடத்திற்கு வந்திருந்ததையடுத்து, அவர்களின் உதவியுடன் உடனடியாக அக்ஷயாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனமே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பெற்றோரின் கவனமும், குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ளும் பொறுப்பும் மிக அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.