கிளிநொச்சியில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக கால போக அறுவடைக்கு
தயாரான நிலையில் காணப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள்
அழிவடைந்துள்ளன என மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக இரணைமடு குளம்
திறந்துவிடப்பட்டுள்ளமையால் அதன் நீர் வெளியேறுகின்ற பகுதிகளுக்கு
அன்மையாக உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில்
மூழ்க்கியுள்ளன. அவ்வாறே ஏனைய குளங்களும் வான் பாய்வதனால் அந்தந்த
பிரதேசங்களில் உள்ள அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட வயல்கள்
அழிவடைந்துள்ளன.
இதற்கப்பால் மழைகாரணமாக வயல்களில் நீர் நிரம்பி இருப்பதனால்
நெற்கதிர்கள் சரிந்து நீரில் மிதக்கின்றன. இதனால் அறுவடை செய்ய முடியாத
நிலையில் அந்த வயல்களும் அழிவடைந்துள்ளன.எனத் தெரிவிக்கும் விவசாயிகள்
இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தமக்கு பெரும் பாதிப்பு
ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.