கினிகத்தேனை நகரில் அமைந்திருந்த பாதுகாப்பற்ற உணவகத்தின் அடித்தளம் இன்று (18.01.2025) இடிந்து விழுந்து ஆறு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
அம்பகமுவ மத்திய கல்லூரியின் 10ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் வெளி வகுப்பில் கலந்து கொள்வதற்காக உணவகத்திற்கு சென்றிருந்தபோது, மரத்தளம் இடிந்து சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு, இடரிற்குள்ளான மாணவர்கள் காயமடைந்த நிலையில் அப் பகுதி மக்களால் உடனடியாக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பற்ற கட்டிடங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் ஹோட்டலின் பாதுகாப்பு மீறலுக்கான காரணங்களை ஆய்வு செய்ய கினிகத்தேன பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். சம்பவத்தால் குறித்த ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1