Pagetamil
கிழக்கு

கலைமாறன் செ. லோகாராசா அவர்களுக்கு விருது

திருக்கோணமலை மூதூர் பாலத்தடிச்சேனைச் சேர்ந்த சிறந்த இலக்கியவாதியும், சோதிட வித்தகரும் மேனாள் மூதூர் வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளருமான கலைமாறன் செ. லோகாராசா அவர்கள் இலங்கையின் புகழ்பெற்ற கல்வி நிர்வாகிகளுள் ஒருவராக விளங்குகிறார். கலைப்பட்டதாரியாகத் திகழ்ந்து, இலங்கை அதிபர் சேவை கல்வி நிர்வாக சேவையில் நீண்டகாலம் பணியாற்றிய இவருக்கு இலக்கிய வித்தகர் விருதும், புலமைத்துவ விருதும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கல்வி கற்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை முடித்து, தனது பன்முகத் திறமையால் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றியவர். ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய இவர், அதிபர், உதவி கல்வி பணிப்பாளர், கோட்டக் கல்வி பணிப்பாளர் என முன்னேறி, பிரதிக்கல்விப் பணிப்பாளராக 40 ஆண்டுகள் கல்வித் துறையில் சிறப்பாக பணி புரிந்தார்.

அறிவுப் பகுத்தறிவு, திறமை, விடாமுயற்சி ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, இலக்கியத்திற்கும் மானசீகப் பொறிமுறைகளுக்கும் உரிய இடம் கொடுத்த கலைமாறன் செ. லோகாராசா, இலக்கியத்தில் 50 வருடங்களாக பயணம் செய்து, இதுவரை 10 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலக்கிய உலகில் அவரது அயராத சேவை இலக்கிய வித்தகர் விருது மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் இவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவரின் சேவை மற்றும் பங்களிப்பு தற்போதைய தலைமுறைக்கும் பிந்திய தலைமுறைக்கும் ஊக்கத்தையும் வழிகாட்டலையும் அளிப்பனவாக அமைகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பு வாவியிலிருந்து இனந்தெரியாத சடலம் மீட்பு

east tamil

இந்திய சோலர் மின் திட்ட விவசாய நிலத்தில் அறுவடை திருவிழா

east tamil

சவுதியில் உயிரிழந்த மூதூர் பெண்

east tamil

திருகோணமலையில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்த ஊழியர் விழிப்புணர்வு செயலமர்வு

east tamil

காட்டு யானை உயிரிழந்தது தொடர்பான விசாரணை

Pagetamil

Leave a Comment