யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்றைய தினம் ( 17 ) காலை புதிதாக 15 மின் விளக்குகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது
குறித்த மின் விளக்குகள் பருத்தித்துறை பிரதேச சபை ஊடக யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை பற்றி கட்டைக்காட்டு கிராம மக்கள் குறிப்பிடுகையில் தாம் நிறைய காலமாக இவ் இடத்தில் இருட்டில் இருப்பதாகவும் அதனை புரிந்து கொண்டு தமக்கு இந்த உதவியை செய்த பாராளுமன்ற உறுப்பினர்க்கு மிகுந்த நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1