இலங்கை கடற்படையின் வெற்றிலைக்கேணி கடற்படை தலைமையகத்தின் ஏற்பாட்டில், வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் எதிர்வரும் 23ம் திகதி (23.01.2025) வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. குறித்த முகாம் முற்பகல் 9.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை நடைபெறும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் சமுதாய சேவை முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த இலவச பல் மருத்துவ முகாமில் பல் பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும். பிரதேச மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கடற்படை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலவச சிகிச்சை முகாமில் பங்கேற்பதன் மூலம் பல் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதால், மாவட்ட மக்களுக்கு இது அரிய வாய்ப்பாகும்