திருகோணமலை முத்துநகர் ஒன்றினைந்த விவசாய அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனின் தலைமையில், நேற்றைய தினம் (17) பெரும்போக அறுவடை விழாவை முன்னெடுத்திருந்தன.
நிகழ்வில், விவசாயிகளின் உழைப்பை பாராட்டி, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்டது.
இந்த விழா, முத்துநகர் பிரதேசத்தின் விவசாயிகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும், இதன்போது, குறித்த மக்களின் காணிகள் அரசாங்கத்தினால் இந்திய சோலர் மின் செயற்திட்டத்திற்கு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களுடைய கருத்தை வெளியிட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1