மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியில் பூட்டப்பட்டிருந்த வீடொன்றிலிருந்து 48 வயதான ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம், அப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நேற்று (15) மாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர்.
சடலம் தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது. மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சடலம் தற்கொலையா? அல்லது கொலையா? என சந்தேகிக்கப்படும் நிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1