நேற்று (15) இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது, முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள சட்டப்படி அனுமதிக்கப்பட்ட உதிரிபாகங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இதில் அகில இலங்கை உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பொலிஸார் மேலும் தெளிவுபடுத்தியதாவது, சட்டத்திற்கு மாறாக ஆபத்தான முறையில் பொருத்தப்பட்ட உதிரிபாகங்கள் மட்டுமே அகற்றப்படும். இந்த நடவடிக்கைகள் வீதிப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. உதிரிபாக உற்பத்தியாளர்களின் தொழிலுக்கு பாதிப்பு இல்லாதவாறு நடவடிக்கை இருக்கும். இந்த தீர்மானம், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை முன்னிலையில் வைத்து எடுக்கப்பட்டதாக பொலிஸ் விளக்கமளித்துள்ளது.