நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் தலைவர் யூ. கே. சேமசிங்க, இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், கால்நடை தீவனத்திற்காகப் பச்சை அரிசியைப் பயன்படுத்தியமையே தற்போது ஏற்பட்ட தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக உள்ளதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உரிய கண்காணிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் அவசியம் என்றும், பச்சை அரிசியின் தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய அரசாங்கம் முறையான திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த போகத்திற்கு முன்னதாக நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிப்பதன் மூலம் நெல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என யூ. கே. சேமசிங்க தெரிவித்தார்.