தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (15.01.2025) மதியம் 3 மணியளவில், நீர்தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்ட பிரதேசவாசிகள், தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டனர்.
சுமார் 30-40 வயதுக்கு இடைப்பட்ட ஆண் எனவும், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபரீதம், அவர் நீரில் அடித்துக் கொண்டு உயிரிழந்தாரா, நீர்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டு சடலம் நீர்தேக்கத்தில் எறியப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சடலம், மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.