இன்றைய தினம் (13.01.2025), திருகோணமலை விஸ்வநாத சமேத சிவன் ஆலயத்தில் வருடாந்திர திருவெம்பாவை தேர் உற்சவம் சிறப்பாகவும் ஆன்மிக பரிமாற்றத்துடன் வெகு விமர்சையாகவும் இடம்பெற்றது.
இந்த புனித நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு, பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆலய வளாகமெங்கும் பக்தர்கள் கோஷங்களை எழுப்பி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். இதனுடன், பூஜை நிகழ்வுகள், வேதமந்திரங்கள், மற்றும் இசை நிகழ்ச்சிகள் அமைதியுடனும் ஆன்மிக வளமுடனும் முன்னெடுக்கப்பட்டன.
திருவெம்பாவை தேர் உற்சவம் திருகோணமலையின் சுபீட்சமான கலாச்சார வரலாற்றின் இன்னொரு சிறப்பு அம்சமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1